Posts

Image
  புத்தகத் தலைப்பு :- ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் ஆசிரியர் :- நீட்ஷே தமிழில் :- ரவி நூல் வெளியீட :- காலச் சுவடு பக்கங்கள் : -422 விலை :- 525/- வணக்கம் நண்பர்களே, 1883-1885 காலகட்டங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந் நூல், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஐரோப்பாவிலும் எனைய உலகநாடுகளிலும் ஒரு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, மதம் சார்ந்த மக்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களுடன் மிக நெருக்கமாவர்களையும் ஒரு தாக்குத் தாக்கி, அவர்களால் மன்னிக்க முடியாத குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் வரிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஃப்ரெடரிக் வில்லியம் நீட்ஷே அவர்கள் எழுதிய நூல் தான் இந் நூல். அதாவது அவரது பிரகடனம், கடவுள் இறந்துவிட்டார் , அவரை நாம் கொன்றுவிட்டோம். இனிமேல் இந்த உலகத்தைக் கொண்டு நடத்த ஒரு அதீதமனிதன் தேவை. அவனை நாங்கள் கண்டுபிடித்து அவரிடம் மிகுதி வேலைகளை ஒப்படைப்போம் என்று அறைகூவல் விடுத்தார். அவர் தெரிவு செய்த மனிதன் தான் அந்த சுப்பர்மான் . இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ரவி (1964-2015) அவர்கள் மூன